கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில், தந்தையின் தாக்குதலில் காயமடைந்த மகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது அருந்திய தந்தை, மகனின் தலையில் தாக்கிய நிலையில், மகன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.