தந்தையின் பின்னால் சென்ற 03வயது பிள்ளை பரிதாபமாக உயிரிழப்பு!

0
215

கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற தந்தையின் பின்னால் சென்ற மூன்று வயது சிறுவன், பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய, கைப்பிட்டிய, இஹலகம பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் தந்தை வழமை போன்று கால்நடைகளை வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதையடுத்து தந்தையை சிறுவன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
எனினும், சிறுவன் தனது பின்னால் வந்ததை தந்தை பார்க்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது, சிறுவன் நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பின்னர் சிறுவனை தேடிய போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.