இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உலகின் பல நாடுகளைப் போன்று இலங்கையிலும் துறைமுகத்தில் பாரம்தூக்கி இயக்குநர்களாக பெண்களும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் என சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர், எதிர்காலத்தில் மேலும் பலரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.