தனது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது!

0
161

காலி- கடுகொட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமியான தனது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தனது பாடசாலையின் இரண்டு ஆசிரியைகளுடன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வெயங்கொட பகுதியில் ஆன்மீகத்தினால் நோயை குணப்படுத்துவதாக கூறி, கைத்தடியினால் தாக்கப்பட்டு உயிரிழந்த 9 வயதுடைய சிறுமி, குறித்த 16 வயதுடைய சிறுமியின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு உதவி வழங்கியதாக கூறி, சிறுமியின் தாயார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த சிறுமி, தந்தை மற்றும் அவரது பாட்டியுடன் வசித்து வந்துள்ள நிலையில், அந்த சிறுமி நீண்ட காலமாக தந்தையினால் கொடூரமாக தாக்கப்பட்டு வந்துள்ளதாக வைத்திய பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி நீதிமன்ற உத்தரவின் படி, காலி – கித்துல்பிட்டி சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரான தந்தை, காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.