முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை கடைப்பிடிக்காமை தொடர்பில் தற்போதைய நிலையில் 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணக் கட்டுப்பாடுகளை மீறிய இருவர் கந்தானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் சட்டத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.