தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய வழிகாட்டுதல் வெளியீடு!

0
180

கொவிட் தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், கொவிட் தொற்றுடன் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கொவிட் தொற்றுடன் தொடர்புடைய நபருக்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர் உடனடியாக அன்டிஜென் அல்லது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் முறையிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பல திருத்தங்களை வெளியிட்டுள்ளார்.