தமது கொள்கைப் பிரகடனம் தொடர்பான, தெளிவூட்டல்களை வழங்க ஆரம்பித்தது மக்கள் போராட்ட முன்னணி

0
96

மக்கள் போராட்ட முன்னணி கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள கொள்கை பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மூன்று இடதுசாரி கட்சிகள் மற்றும் செயற்பாட்டார்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்ட முன்னணி கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் தமது கொள்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயற்;பாட்டாளர்களுடன் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள், கட்சியின் பூர்வாங்க செயற்பாடுகள் தொடர்பாகவும் இன்று அவர்கள் கலந்துரையாடினர். வசந்த முதலிகே. தம்மிக முனசிங்க, ராஜ்குமார் ராஜீவ்காந் ஆகியோர் இக் கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.