தமிழரசு,ரெலோ, புளொட் தனித்து களமிறங்குமா?: கட்சி முக்கியஸ்தர்கள் பதில்!

0
130

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்துச் சந்திப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் நிலையில், வெறுமனே தேர்தல் வெற்றிக்காக கூட்டமைப்பு அவ்வாறானதொரு முடிவுக்கு வராது என, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழினத்தின் நன்மைகளைப் பாதிக்காத வகையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், இந்த விடயத்தில் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், சுமந்திரனின் கருத்துகளுக்குப் பதிலளத்துள்ளனர்.