புலிகளின் சரணடைந்த உறுப்பினர்கள் தொடர்பில் இராணுவமும் பதிலளிக்க வேண்டும்!

0
158

தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைந்த உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு முன்பாக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி இராணுவத்தை நேரில் முன்னிலையாகி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைக் கோரி இலங்கை இராணுவத்துக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பம் ஒன்றுக்கு 14 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்பது சட்டமாகும். இந்த நிலையில் சரணடைந்த புலிகள் தொடர்பான தகவல்களை கோரும் வழக்குக்கு சுமார் 4 வருடங்களாக பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.