நாடு பாரதூரமான நெருக்கடிநிலையை நோக்கி சென்று கொண்டி ருக்கின்றது. ஆரம்பத்தில் தங்களால் அனைத்தையும் சமாளிக்க முடியு மென்று கருதிய ராஜபக்ஷ அரசாங்கம், இப்போது கீழிறங்கி வந்திருக் கின்றது. தமிழ்த் தேசிய கட்சிகள் என்போர் வழமைபோல், தங்களின் தேர்தல் வெற்றிக்கான முதலீடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
சர்வகட்சி மாநாட்டை தமிழ்த் தேசிய கட்சிகள் பலவும் புறக்கணித் திருக்கின்றன. ஒன்றை புறக்கணிப்பது பெரிய விடயமல்ல – இதற்கு முன்னரும் பல புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் கண்டிருக்கின்றனர். ஆனால், கேள்வி – புறக்கணித்த பின்னர் அடுத்தது என்ன? இதற்கு புறக்கணித்த கட்சிகளிடம் பதிலுண்டா?
ராஜபக்ஷக்களின் அரசாங்கம் நெருக்கடியில் இருக்கின்றது. ராஜ பக்ஷக்கள் தொடர்பில் இதுவரையில் இருந்துவந்த சிங்கள அபிப் பிராயங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். இதன் விளைவு என்னவாகலாம்? அடுத்த தேர்தலில் ராஜபக்ஷக்கள் முன்னரைப்போல் வெற்றிபெற முடியாத நிலைமை ஏற்படும். தனிச் சிங்கள வீரஅரசியலின் கதை முடிவுக்கு வரும். ஆனால், இதனால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது?
அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்திருக்கும் கட்சிகளிடம் – இன்றைய நெருக்கடிநிலைமையை கையாள்வதற்கான பொது வேலைத்திட்டம் இருக்கின்றதா? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரண்டு கட்சிகள் மகாநாட்டில் பங்குகொண்டிருக்கின்றன. ஒரு பங் காளிக் கட்சியான ரெலோ வெளியில் நிற்கின்றது. விக்னேஸ்வரன் வெளியில் நிற்கின்றார். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வெளியில் நிற்கின்றார். இந்தப் பின்னணியில் நோக்கினால் – இவர்கள் அனை வரும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடியும்? ஆனால், அது சாத்தியப் படுமா? ஏனெனில், ஒரு விடயத்தை நிராகரிக்கின்ற போது, தங்களு
டைய அரசியல் நிலைப்பாட்டை முன்கொண்டு செல்வதற்கான தெளி வான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அவ்வாறில்லாது விட்டால் இவ்வாறான நிராகரிப்புக்களால் எந்தவொரு பயனும் இல்லை.
தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் எவற்றிடமும் எந்தவோர் அரசியல் வேலைத்திட்டமும் இல்லை. அவர்களிடம் இருக்கின்ற ஒரேயொரு வேலைத்திட்டம் – அடுத்த தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் சிலரை எப்படியாவது வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே! இந்தப் பாராளுமன்ற ஆசனங்களால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியுமென்றால், தமிழ் மக்களின் பிரச்னையென்று ஒன்று இப்போதிருந்திருக்காது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு விடயம் தெளிவானது. அதாவது, மயிலே, மயிலே இறகு – போடென்றால் – அது நடக்காது. சிங்கள ஆட்சியாளர்களின் நிலைமைகளை சரியாகக் கணித்து, அதற்கேற்ப அரசியலை முன்னெடுக்கின்றபோது மட்டும்தான், ஓரளவு வாய்ப்புக்களை பெற முடியும். அந்த வாய்ப்புக்களையும் புத்திசாலித் தனமாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, சில விடயங்களை அடைய முடியும். எனவே இப்போது, தமிழ் தேசிய கட்சிகள் செய்ய வேண்டியது, இன்றைய நிலைமையை எவ்வாறு கையாள்வதென் னும் நோக்கில், தங்களுக்கான சர்வகட்சி மாகாநாடு ஒன்றைப் பற்றி சிந்திப்பதாகும்.
தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக் கொள்ளும் அனைத்து கட்சிகளும் – இன்றைய அரசியல் நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ளும் உபாயங்களை ஆராயும் நோக்கில் சர்வகட்சி மகா நாடு ஒன்றை கூட்ட வேண்டும். தமிழ்த் தேசியக் கட்சிகளாக செயல் படுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய வேண்டும். ஏனெ னில், எந்தவொரு நெருக்கடி நிலைமையும் நிரந்தரமானதல்ல. நெருக் கடிகள் மாறும் – எதிர்பாராத புதிய நெருக்கடிகள் வரும். அரசியலில் இது மாறி, மாறி நிகழும். ஆனால், இந்த நிலைமைகளை விளங்கிக் கொண்டு, தமிழர்கள் சுழியோடவில்லையாயின், எப்போதும் வெறுங்
கையை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக மட்டுமே இருக்க நேரிடும்.