தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதுவர் சிரி வோல்ட்க்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.
யாழிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, தழிமீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் தலைவர் சுரேஷ்; பிரேமச்சந்திரன் , அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், யாழ். மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.