தமிழ்நாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

0
59

இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்கiளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் போராட்டம்; காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 22 பேர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதுடன் 3 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நேற்று மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உதத்ரவிட்டார்.

இதனிடையே இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 4 மீனவர்கள் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 204 இந்திய மீனர்வகள் 27 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.