தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சி எதிர்பார்த்தது போன்று வேகமாக நகரவில்லை. ஆனாலும்இ முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கில் தான் எம். ஏ. சுமந்திரன் ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தார். கூட்டத்தில் பேசியவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் பொது வேட்பாளர் ஒரு விஷப்பரீட்சை என்னும் தொனியிலேயே பேசியிருந்தனர்.
தமpழ் பொது வேட்பாளர் ஏன் தேவை? – அதன் முக்கியத்துவம் என்ன? – அதற்கு மாற்றான – அதனைவிடவும் சிறந்த யோசனை இருக்கின்றதா? என்னும் கேள்விகளின் அடிப்படையில் மக்கள் மத்தியில் பெருமளவில் உரையாடல்கள் இதுவரையில் நடைபெறவில்லை. தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை சரியென்று வாதிடும் அரசியல் கட்சிகள் இதுவரையில் மக்கள் மத்தியில் செல்லவில்லை. இது கட்சிகளின் பலவீனமாகும். சிவில் சமூக தரப்பினரும் பகிரங்க கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை. இது சிவில் தரப்புகளின் பலவீனமாகும்.
‘மக்கள் மனு’ வடக்கு கிழக்கு சிவில் சமூகம் மக்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்தாய்வு நிகழ்வுகளை தவிரஇ இதுவரையில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்து எந்தவொரு பகிரங்க சந்திப்புகளும் நடைபெறவில்லை. இவ்வாறானதோர் இடைவெளி யில்தான் சுமந்திரன் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். சுமந்திரனோ அல்லது வேறு எவரோ தங்களின் கருத்துகளை முன்வைக்கும் உரிமை உள்ளவர்கள்.
ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதும் சாதாரணமானதுதான். இங்கு பிரச்னை சுமந்திரனின் கருத்துகள் அல்ல. ஆனால்இ அவர் அதனை வெளிப்படுத்தும் முறைமைதான் பிரச்னையானது. அவரின் அணுகுமுறை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. தமிழ் பொது வேட்பளார் நிலைப்பாடு தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி இதுவரையில் அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் இந்த நிலைப்பாடு எதிர்க்கப்பட வேண்டும் – இதற்கு எதிராக பொது மக்கள் மத்தியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுமந்திரன் எந்த அடிப்படையில் கூறு கின்றார்? சுமந்திரனின் நிலைப்பாட்டை தமிழ் அரசு கட்சி ஏற்றுக் கொள்கின்றதா? கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதி ராசா மற்றும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் முன் னிலையில்தான் இவ்வாறானதொரு கருத்தை சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளைஇ சிவஞானம் சிறீதரன் தமிழ் பொது வேட்பளார் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். இதில்இ தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழ் அரசு கட்சிக்கான புதிய தலைவர் தெரிவின் பின்னர் இடம் பெற்ற உள்முரண்பாடுகளை தொடர்ந்து தமிழ் அரசு கட்சியானது – ஒரு கட்சியென்னும் அடிப்படையில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது. உண்மையில்இ பிறிதொரு வலுவான கட்சியின்மையே தமிழ் அரசு கட்சியின் ஒரேயொரு பலமாக இருக்கின்றது.
இல்லாவிட்டால்இ எப்போதோ தமிழ் அரசு கட்சியின் அரசியல் பயணம் முடிவுற்றிருக்கும். கட்சிஇ அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே இதுதான் நிலைப்பாடு – இப்ப டித்தான் செயலாற்ற வேண்டும் என்று சுமந்திரனால் ஆக்ரோஷமாகக் கூற முடிகின்றதென்றால் கட்சியின் பலவீனமே அதற்கான ஒரேயொரு காரணமாகும்.