28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை கண்டு அச்சமடைந்துள்ளது – குமாரஸ்ரீ

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் சிவனேசதுரை சந்திரக்காந்தன்(பிள்ளையான்) அவர்களை கண்டவுடன் கொதித்து கொண்டு இருக்கின்றார்கள். இதனால் தனது ஊழல்கள் வெளியாகிவிடும் எனும் அச்சத்தில் நடுநிலை ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளுக்கு தவிசாளர் அனுமதிக்கிறார் இல்லை என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரஸ்ரீ குற்றசாட்டினார்.

அம்பாறை ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர்:-

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராக செயற்பட்டு வருகின்றேன். 2011 ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலில் தற்போது தவிசாளராக உள்ளவருடன் நானும் போட்டியிட்டிருந்தேன்.
எனவே தான் 2011 ஆண்டு காரைதீவு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வந்தது. ஆகவே 2011 ஆண்டு முதல் இன்று வரை அந்த கட்சியின் செயற்பாடு இம்மண்ணில் இருந்து வருகின்றது.
தற்போது தவிசாளருக்கு பீதி வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பொழுது மக்களால் துரோகியாக வர்ணிக்கப்பட்டவர். தற்போது தியாகி என்பதற்கு அப்பால் அதற்கும் ஒரு படி சென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இச்செயற்பாடு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் சிவனேசதுரை சந்திரக்காந்தன்(பிள்ளையான்) அவர்களை கண்டவுடன் கொதித்து கொண்டு இருக்கின்றார்கள்.


ஏனெனில் அவர்களுடைய பலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கின்றது. இதனால் அவர்களுக்கு பயம் வந்திருக்கின்றது. நான் காரைதீவு பிரதேசத்தில் இருக்கும் வரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதன் அரசியலை மேற்கொண்டே இருக்கும்.

இன்று குமாரசிறியாகிய நான் செய்கின்ற செயற்பாடானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் செய்கின்ற செயற்பாடாகவே அமைகின்றது

மக்களுக்கு தெரியும் இப்பிரதேசத்தில் எமது கட்சி சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்தது. காரைதீவு மண்ணில் முதலாவது சுனாமி நினைவு அஞ்சலி கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் தான் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு போன்ற செயற்பாட்டில் தான் நாம் இயங்கி கொண்டு இருக்கின்றோம். தொடர்ந்தும் எதிர்காலத்தில் பல்வேறு தேர்தல்களை சந்திக்க இருக்கின்றோம். ஆனால் தனது ஊழல்கள் வெளியாகிவிடும் எனும் அச்சத்தில் நடுநிலை ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளுக்கு தவிசாளர் அனுமதிக்கிறார் இல்லை. நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகளை அமைவாக எனது மாதாந்த கொடுப்பனவை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக ஊரில் உள்ள முக்கிய அமைப்புக்களினுடாக செலவு செய்து வருகிறேன். ஊர் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது என்பதை வலியுறுத்தி காரைதீவு- அம்பாறை, கல்முனை- அக்கரைப்பற்று வீதியில் பிரதேச சபை இலட்சனை பொறித்த அறிவித்தல்களை தொங்க விட்டுள்ளேன். பிரதேச சபை நிதியை மோசடி செய்து பதாதை வைப்போர் மத்தியில் என்னுடைய சொந்த செலவில் செய்த இந்த பணிகளையும் பிரதேச சபையில் உள்ள சில அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோர் விமர்சித்து வருகிறார்கள். கடந்த பாதீட்டில் தவிசாளருக்கு 170 லீட்டர் எரிபொருளுக்கு சபை அனுமதி வழங்கப்பட்டது. அரசினால் வழங்கப்பட்ட சில சலுகைகளை காரணம் காட்டி அவருக்கு ஆதரவான உறுப்பினரை கொண்டு பிரேரணை முன்வைத்து அதை 500 லீட்டராக சபை அனுமதியை பெற்றுக்கொண்டார். இது யாரின் பணம்? இந்த அநீதிகளை தட்டிக்கேட்டால் என்னை அவரின் ஜென்ம விரோதிகள் போன்று பார்க்கிறார்கள்.

நான் பதவி வகிக்க ஆரம்பித்த கடந்த 10 மாதங்களாகவே காரைதீவு பிரதேச சபையில் குழப்பங்கள் நிலவுவதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார். கடந்த 39 வது சபை அமர்வில் தவிசாளரின் அறைக்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான குளிரூட்டியை பொருத்த பிரேரணையை சபையில் முன்வைத்தார். அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்று கூறுவதை விட அவரது ஆணவம் தோற்கடிக்கப்பட்டது என்று கூறுவதே பொருத்தமாக அமையும். அந்த பிரேரணையை நாங்கள் ஏற்று கொள்கிறோம். என்னுடைய உரையிலும் நான் அது தொடர்பில் ஆதரவாகவே தான் பேசினேன். எங்களின் ஆலோசனைகளையும் வலியுறுத்தல்களையும் ஏற்காமையாலையே தான் அதை எதிர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மக்களுக்கு சேவை வழங்க வேண்டிய நாங்கள் அநியாயமான செலவினங்களினால் எவ்வித சேவையையும் செய்யாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அலுவலக தளபாடங்கள் கொள்வனவு செய்தல், மக்களுக்கான உதவிகள் செய்வதற்கு கூட முடியாத நிலையே இருக்கிறது. கடந்த காலங்களில் தனியார் கோபுரம் அமைத்த வழக்கில் வாதாட 15000 ரூபாய் வழங்கி சட்டத்தரணி நியமிக்கப்பட்டார். நியாயமான காரணங்களை முன்வைத்து எதிர்த்தோம். அதை ஆதரிக்க வேண்டி தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருவித முன்னெடுப்பை கொண்டு ஊர் பிரமுகர்களின் ஆலோசனைப்படி ஆதரவளிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஊர் மக்களை மதித்து நான் செயற்படுகிறேன். இருந்தாலும் இவரின் ஊழல்களை தட்டிக் கேட்பதனால் என்னை விமர்சிப்பதை சிலர் தொழிலாக கொண்டுள்ளார்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles