தமிழ் பொதுவேட்பாளரின் கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்ற மக்கள்

0
71

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் சங்கு சின்னத்தில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து வவுனியா – குருமண்காடு கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொது வேட்பாளர் அரியநேத்திரன் மற்றும் அவரை ஆதரித்து ரெலோ தலைவரும் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன், ஈ. பி.ஆர்.எல்.எவ்.தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.