தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தமிழ் மக்கள் இணைந்து செயற்படாவிட்டால் தமிழ்த் தேசியம் பாதிப்படையும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.