ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கஇ இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனைஇ 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னேடுப்போம் என்பதாகும்.
ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்த யோசனையை நாம் வரவேற்கிறோம். அநுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்திற்கு உள்ளேயே நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டும் என்ற குறுகிய அரசியலையும் நாம் செய்யவில்லை. புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்க பட வேண்டும் என நாம் எண்ணுகிறோம்.
ஆனால்இ அதேவேளையில் புதிய பாராளுமன்றத்தில்இ இந்த உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சர்வகட்சி கலந்துரையாடலின் போதுஇ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வெற்று காசோலை தரவும் நாம் தயார் இல்லை.
புதிய பத்தாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்று உத்தேச தேசிய கலந்துரையாடலில் பங்கேற்றுஇ நமது மக்களின் நியாயமான அபிலாசைகளை புதிய அரசியலமைப்பில் இடம் பெற செய்ய வேண்டும். இந்நோக்கில்இ தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும்இ வடகிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.