தம்பிலுவில் தேசிய பாடசாலையில் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் திறப்பு

0
214

அம்பாரை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் மாணவர்களின் நலன்கருதி துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.விஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைவாக புலம்பெயரந்து கனடாவில் வாழும் அழகுராசா ஜெகதீசனின் நிதி பங்களிப்புடனும் தமபிலுவில் தேசிய பாடசாலை நிருவாகத்தினரின் பங்களிப்புடனும் நிர்மாணித்து மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் பா.சந்திரேஸ்வரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி தரிப்பிட திறப்பு நிகழ்வில் திருக்கோவில் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.இரவீந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இருந்ததுடன் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசியரியனர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு நிருவாகிகள் கல்விசாரா ஊழியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.