தம்புத்தேகமவில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
35

தம்புத்தேகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம மஹபெல்லங்கடவல பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து இன்று இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

57 வயதுடைய ஆணொருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மரணம் கொலையா , தற்கொலையா என இன்னும் தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.