ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அவரிடம் உள்ள குறைபாடேயாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.