தரமற்ற மருந்து கொள்வனவு: வாக்குமூலம் பதிவு

0
89
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மருத்துவ வழங்கல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தேவசாந்தி சொலமனிடம் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.தற்போது காவலில் உள்ள தேவசாந்தி சொலமனிடம் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று காலை 9 மணி முதல், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சிறை வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்தமைக்காக மருத்துவ வழங்கல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உட்பட 4 பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்திடம் இருந்து முக்கியமான ஆவணங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது. குறிப்பாக, மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான கோப்புகள் அரச ஆய்வாளரால் இன்னும் கையளிக்கப்படவில்லை.அமைச்சிடம் இருந்து பெறப்பட்ட கோப்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் காரியாலயத்தை பரிசோதிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அண்மையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து குறித்த கைது இடம்பெற்றது.