தலைமையற்ற அரசியல்?

0
174

ஓர் அரசியல் போக்குக்கு தலைமையே அடிப்படையானது. எங்கு தலைமை பலவீனமாக இருக்கின்றதோ அங்கு, அரசியலானது சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் ஒரு கருவியாக தொழில்படாது.
2009இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் போக்கானது, வெறுமனே, ‘பேச்சு பல்லக்கு தம்பி பொடி நடை’ என்பது போல் இருக்கின்றது. பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், பேசப்படும் விடயங்களை எவ்வாறு அடைவதென்னும் கரிசனை எவருக்குமில்லை – ஏனெனில், எதையும் அடைய வேண்டுமென்னும் நோக்கமே தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இருப்பர்களுக்கு இல்லை.
ஒருபுறம் வாய்ப்புகளை துல்லியமாகக் கணித்து அதனை நோக்கி தங்களின் ஆற்றலை திரட்டிக் கொள்ள முடியாமல் கூட்டமைப்பு தடுமாறிக் கொண்டிருக்கின்றது. மறுபுறமோ, எதிர்ப்பதை தவிர வேறு எதையும் செய்வதில்லை என்னும் நிலைப்பாட்டோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இயங்கி வருகின்றது.
இந்தப் பலவீனத்தை அவ்வப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களிலிருந்தே தெளிவாக நோக்க முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு காலத்தில் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தெரிவித் திருந்தார். தங்களால் முடியாமல் போகும்போது, தங்களின் இயலா மையை மறைப்பதற்காக கடவுளிடம் மன்றாடுவதும்கூட தமிழ் அரசி யல் கட்சிகளின் இயல்பாகும்.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை சிங்கள ஆட்சியாளர்கள் நிறை வேற்றவில்லை – அவர்கள் தமிழ் மக்களை இரண்டாம்தர பிரஜை களாக நடத்துகின்றனர் – இந்தக் கூற்று முற்றிலும் சரியானது. இது எந்தளவுக்கு சரியானதோ அதேயளவுக்கு சரியானது. சிங்கள ஆட்சி யாளர்கள் நெருக்கடியிலிருக்கும் சந்தர்ப்பங்களை கச்சிதமாக பயன் படுத்திக்கொண்டு, தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்ளும்
அரசியல் உபாயங்களை சரிவர தமிழ் தலைவர்கள் என்போர் கையாள வில்லை என்பதும் வெள்ளிடைமலையாகும். சிங்கள ஆட்சியாளர்கள் ஒடுக்குமுறையாளர்கள் – அவர்களின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசிய அரசியல் இலக்காகும். இந்த நிலையில், சிங்கள ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்புவதில் என்ன பொருள் இருக்க முடியும்? இதிலென்ன அரசியல்
ஆளுமையுண்டு?
சிங்கள ஆட்சியாளர்கள் இன்னும் வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்று வார்கள்தான். ஏனெனில், சிங்கள மக்களை பொறுத்தவரையில் புதிய அரசியல் யாப்பு மற்றும் அடிப்படையான கட்டமைப்பு மாற்றங்கள் என்பவை முதன்மையான பிரச்னைகள் அல்ல. ஜே. வி. பி. மற்றும் முன்னிலை சோசலிச கட்சிகள் போன்றவை தாங்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே சில மாற்றங்கள் தேவையென்று
கூறுகின்றனர். கொழும்பில் இயங்கிவரும் சிவில் சமூகக் குழுக்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்க்கும் நோக்கில் மாற்றங்கள் தொடர்பில் கோரவில்லை.
எனவே, அரசமைப்பு மாற்றம் என்பது அவர்களுக்கு முதன்மையான பிரச்னைகள் இல்லை. அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமே முதன்மையான பிரச்னையாகும். இதனைப் புரிந்து கொள் ளாமல் சிங்கள ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று குரலெழுப்புவதில் எவ்வித பயனும் இல்லை. உண்மையில், அரசியல் சூழலை சரியாகக் கணித்து கிடைக்கும் சந்தர்ப்பங்களை கையாளத்
தெரியாமல் இருப்பது யாருடைய பிரச்னை? சிங்கள ஆட்சியாளர்களின் பிரச்னையா? வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தத் தவற விடு கின்றபோது சிங்கள ஆட்சியாளர்களே நன்மையடைகின்றனர். இத னைப் புரிந்துகொள்ளாமல் முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய அரசி யல் முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கே வாய்ப்பாக அமையும்.