தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை!

0
6

விஜய் தவிர வேறு புகைப்​படங்​களை பயன்​படுத்​தி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும், கட்சி நிகழ்ச்​சிகள் மற்​றும் பொதுக்​கூட்​டங்​களில் பட்​டாசு வெடிக்​கக் கூடாது என்று  தமிழக வெற்றிக் கழகம்(தவெக) நிர்​வாகி​களுக்கு பொதுச் செய​லா​ளர் ஆனந்த் வழி​காட்டு நெறி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: கட்​சி​யின் கொள்​கைகள், கோட்​பாடு​கள் மற்​றும் குறிக்​கோள்​களின் நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வித​மாகக் கட்​சி​யினர் ஒரு​போதும் செயல்​படக் கூடாது.

தேர்​தல் பரப்​புரை மற்​றும் உறுப்​பினர் சேர்க்கை பணி​களுக்​காக வீடு​வீ​டாகச் செல்​லும்​போது, கட்சி தலைமை அதி​காரப்​பூர்​வ​மாக அனு​ம​தித்​துள்ள பரப்​புரை வாசகங்​கள் மற்​றும் புகைப்​படத்​தைக் கொண்ட ஸ்டிக்​கர் மட்​டுமே ஒட்ட வேண்​டும். பரப்​புரை சார்ந்து அங்​கீகரிக்​கப்​ப​டாத பேனர் டிசைன்​கள், இலச்​சினை​கள், வாசகங்​களைப் பயன்​படுத்​தக் கூடாது.

மேலும், கட்​சி​யின் அனைத்து நிலை அமைப்​பு​களின் சார்​பில் நடத்​தப்​படும் உள்​ளரங்கு மற்​றும் பொது​வெளி, பொதுக்​கூட்ட நிகழ்ச்​சிகளில், கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் பட்​டாசு வெடித்​துக் கொண்​டாடு​வதை தவிர்க்க வேண்​டும். அதே​போல், கட்சி நிகழ்ச்​சிகளின்​போது பொது​மக்​களுக்​கும் போக்​கு​வரத்​துக்​கும் எவ்​வித இடையூறும் இல்​லாமல் செயல்பட வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.