தாஜ்மஹாலுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இன்று (03) மின்னஞ்சல் மூலம் சுற்றுலாத் துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் செய்தி வந்தவுடன் தாஜ்மஹால் வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சி. ஐ. எஸ். எப். மற்றும் பணியாளர்கள் வளாகம் முழுவதும் விசாரணை நடத்தியுள்ளனர்.