27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது.
இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.
10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், 300 மீற்றர் உயரம் கொண்டதாக இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலி அனுமதி சீட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவது தொடர்பில் சீன தூதரகம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில், சீன தூதரகம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரப்படும் அனுமதி சீட்டுக்கள் போலியானது என தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அனுமதி சீட்டை சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து இலவச விளம்பரத்தை வழங்கியமைக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles