மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் செயற்பட முடியாது என்பதுடன், என்னுடைய வாயை எவராலும் அடைக்க முடியாது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்காவின் சூழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நாம் இனி தொடரவுள்ளோம்.
அது மாத்திரமல்லாது, இலங்கையை இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் போன்று மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்கஷ செயற்படுகின்றார் என்று கூறினார்.