தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கொவிட் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்தவர்கள்

0
429

தாய்ப்பால் கொடுக்கும் அனைத்து தாய்மாரும் கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு இதுவரையில் பூரண ஆலோசனைகள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.