தாய்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட சிறிய உள்நாட்டு பயணிகள் விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில்
9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாங்கொக்கிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் தேடுவதற்கு மிகவும் கடினமாக பகுதியில்
சிதைவடைந்த உடல்பாகங்களை மீட்புக்குழு மீட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஹொங்கொங்கை சேர்ந்த ஐந்து சீன பிரஜைகளும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன