தாய்லாந்தில் சாதித்த இலங்கை சிறுமி

0
22

தாய்லாந்தில் நடைபெற்ற ஐம் மொடல் சேர்ச் கிட்ஸ் இன்ரநெஷனல் – 2025 அழகுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 8 வயது ஏஞ்சலா விமலசூரிய, என்ற சிறுமி பட்டத்தை வென்ற பிறகு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தப் போட்டி தாய்லாந்தின் பாங்கொக்கில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ஏஞ்சலா விமலசூரியா கொழும்பின் ஹவ்லொக் பிளேஸில் வசிப்பதுடன் செயிண்ட் லோரன்ஸ் கொன்வென்ட்டில் தரம் 4 இல் படிக்கிறார்.

இந்த வெற்றியுடன், ஏஞ்சலா நேற்று தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யுஎல்403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அச்சிறுமியை வரவேற்க அவரது பயிற்சியாளர் உட்பட ஒரு குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.