தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
44

தாய்வான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. யுஜிங் நகரிலிருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தை மையமாகக் கொண்டு நள்ளிரவு 12.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிச்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 15 பேர் இலேசான காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.