தாய்வானில் 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் 21 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.