அம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம் (17-11-2024) மாலை அங்குனுகொலபெலஸ்ஸ ரன்ன வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள கராஜில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் அகுனகொலபெலஸ்ஸ – ரன்ன வீதியில் வசிக்கும் 18 வயதான சதீப சித்மின என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்து அதன் மேல் மூடி கராஜில் வேலை செய்து கொண்டிருந்தவர் மீது விழுந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெடித்துச் சிதறிய இரும்பு பெரல் கராஜில் வாகனங்களுக்கு பெயிண்ட் தின்னர் கொண்டு வர பயன்படுத்தப்படும் வெற்று இரும்பு பெரல் எனவும் அதில் இருந்த கேசே பெரல் வெடிப்பதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடித்த பெரலின் மூடி பகுதி கழன்று வீசப்பட்டு இளைஞனின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால் இளைஞன் அகுனகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.