திடீரென கிரிக்கெட்டில் களமிறங்கிய அஜித்.. யாருடன் விளையாடினார் தெரியுமா?

0
99

நடிகர் அஜித் தற்போது ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் ஜப்பானில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முன்பாக அஜர்பைஜானில் நடைபெற இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்றும் அங்கு அவர் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பின் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் மகிழ் திருமேனி இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித் மகன் ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் நிலையில் தற்போது அப்பாவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் கண்கொள்ளா காட்சியை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

அஜித் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார் என்பதும், குறிப்பாக மகன் ஆத்விக் பள்ளி நிகழ்ச்சி அனைத்திற்கும் தவறாமல் கலந்து கொள்பவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மகன் ஆத்விக் உடன் கிரிக்கெட் விளையாடும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.