திருகோணமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றியுள்ளது. கணவன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் உறவினர்களின் வீட்டுக்கு வவுனியா சென்று கொண்டிருந்த போது மிரிஸ்வௌ பகுதியில் இச் சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் திருகோணமலை அன்புவெளிபுரம்- அண்ணா வீதியில் வசித்து வரும் கிரீஸ்கந்ததேவன் சஞ்சீவதரன என 32 வயது நபருடைய மோட்டார் சைக்கிளே தீப்பற்றியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மொரவௌ பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் தீ பற்றியதற்கான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.