திடீரென பரவிய கரும்புகைக்கான காரணம் வௌியானது

0
141

கடுவலை – பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள்  களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காணியில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

தீயினால் நீர் வழங்கல் சபையின் பல நீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன.

மேலும், தீயினால் எழுந்த பெரும் கரும்புகை அதனை அண்டிய பகுதிகளுக்கு பரவிய நிலையில், அந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது