30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவுதினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரத்தின்படி, இன்று காலை 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பமானது. மாவீரர் ரொஷானின் தாயாரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்துக்கு முன்னாள் போராளியொருவர் மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வுபூர்வமாக  நினைவேந்தல் அனுஷ்டித்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும் முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles