திருகோணமலை மாவட்டத்தில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் எனும் கருப்பொருளில் செயற்றிட்டமொன்று
இன்று முன்னெடுத்தது.

செயற்றிட்டம் மிசெரியோவின் நிதியுதவியுடன், திருகோணமலை எகெட் கரித்தாஸ் மற்றும் கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம் அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதன்போது எகெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்பணி. போல் றொபின்சன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலக அனார்த்த முகமைத்துவ பிரிவு உத்தியோகத்தரினால் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் பற்றிய செயலமர்வு இடம்பெற்றது.
எகெட் கரித்தாஸ் நிறுவன உத்தியோகத்தர்களான மு.ரஜித், யு.ஆ.பிரசாத், ஆ.டினேஸ், சு.ரிசாந்த் எனப் பலரும்; கலந்துகொண்டனர்.
