திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீனவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.
கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.