திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

0
205

தமிழின படுகொலை நினைவு நாள் மே 18 இன் ஆரம்ப நிகழ்வு திருக்கோணமலை மாவட்டத்தின் வரோதயநகர், சல்லி, தம்பலகாமம், சின்னக்குளம், அம்மன்நகர் ஆகிய கிராமங்களில் இடம்பெற்றது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

திருகோணமலை வரோதயநகர் பகுதியில் இடம்பெற்ற இந் நினைவு நிகழ்வில் கிராம மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.