திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவரை காணவில்லை என ஈச்சிலம்பற்று
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் பணிகள் பிரதேச மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டபோதிலும் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லையென ஈச்சிலம்பற்று பொலிஸார்
தெரிவித்தனர்.
காணாமல் போன மீனவர் மீன்பிடிக்கச் சென்ற தோணி களப்பிலிருந்து
மீட்கப்பட்டுள்ளது.
இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த 53 வயதுடைய மகேந்திரன் என்ற மீனவரே காணாமல் போயுள்ளார்.
இவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு படகு மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மீனவரின் தோணியிலும் சேதங்கள் இருப்பதையும் காணமுடிந்தது.
இன்று மாலை வரை பிரதேச மீனவர்கள் தேடுதலில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.