திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டம்

0
191

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ், பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன், திருகோணமலை எகெட் கரித்தாஸின் அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
எனும் தொனிப் பொருளில், உப்புவெளி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது.
200க்கும் அதிகமானோர் இதில் பங்குபற்றியிருந்தனர்.எகெட் கறித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி டீ.போல் றொபின்சன் அடிகளாரின் தலைமையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.