திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன்
தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் திறப்பு விழா

0
156

திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் மகாவித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டப திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதியாக கடற் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பங்கேற்று கட்டடத்தினை திறந்துவைத்ததோடு உப்புவெளி பிரதேச சபை தவிசாளர் ரத்னாயக்க, திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன், தென்கலை ஆதீனத்தின் அகத்தியர் அடிகளார் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
அது தொடர்பில் விரைவில் முடிவுகள் எட்டப்படும் என தெரிவித்தார்.

திருகோணமலையினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்கள் மக்களது பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதால் ஒருபோதும் பொது மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் அரசியல் செய்ய ஏதேனும் பிரச்சினைகள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன் தாம் அவ்வாறு பொது மக்களது குறை நிறைகளை தீர்ப்பதற்காகவே தாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியொட்ட அமைச்சர் அவர்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மண்ணெண்ணை பிரச்சினையானது நாடு தளுவிய ரீரியில் காணப்படுகிறது அதனை தீர்ப்பதற்காக தனியார் துறையிடம் தாம் கதைத்து வருவதாகவும் அது தொடர்பில் விரைவில் முடிவுகள் எட்டப்படும் என தெரிவித்தார்.