திருகோணமலை குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின், மூன்றாவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட தூஆ பிரார்த்தனையொன்று இன்று இடம்பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தலைமையில் இடம்பெற்ற, பிரார்த்தனை நிகழ்வில், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மத்தரஸா மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
2021ம் ஆண்டு, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.