திருகோணமலை தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டது.
சிறுவர்களின் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு, மாணவிகள், தோப்பூர் பிரதான வீதியூடாக ஊர்வலமாகவும் பயணித்தனர். ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்’ எனும் தொனிப் பொருளின் கீழ், நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.