திருகோணமலை பச்சநூர் பகுதியில் இராணுவ கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது

0
9

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் இராணுவ கெப் வாகனத்தின் டயர் வெடித்து
விபத்துச் சம்பவித்துள்ளது. வாகனத்தில் பயணித்த இராணுவ வீரர்கள் எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.

சேருநுவர பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இராணுவ கெப் வாகனமே விபத்தினை
எதிர்நோக்கியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.