திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தரும் கிளினிக் நோயாளர்கள், சக்கர நாற்காலி இன்றி அவதியுறுகின்றனர்.

0
151

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், மாதாந்த மருத்துவப் பரிசோதனைக்காக வருகை தரும் நோயாளர்கள்,
சக்கர நாற்காலி இன்றி அவதியுறுகின்றனர்.
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் நோயாளர்களில் பலர், நடமாட முடியாதவர்களாக
உள்ளனர்.
அவர்கள் பரிசோதனைக் கூடத்திற்கு வருகை தருவதற்கு, சக்கர நாற்காலிகள் இன்றி, உறவினர்களால் கைத்தாங்கலாக அழைத்து
வரப்படுகின்றனர்.
வைத்தியசாலை நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட குறைபாடு தொடர்பில் கவனத்தில் எடுத்து, சக்கர நாற்காலிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்
என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.