திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு 

0
54

திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று (20) காலை முதல் இடம்பெற்று வருகிறது.

அத்தோடு, திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி செயற்படவுள்ளது. 

நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடெங்கும் மிகத் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.