திருகோணமலை மூதூரில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

0
21

திருகோணமலை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு இன்று நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் கலந்து கொண்டு நுளம்பு
வலைகளை வழங்கி வைத்தார்.

இந்த வருடத்தில் மூதூர் சுகாதார வைத்தி அதிகாரி பிரிவில் மாத்திரம் 125 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.