திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில், மாடொன்றுடன் மோதி, முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில்,
ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு இச் சம்பவம் பதிவாகியுள்ளது. தோப்பூர் வைத்தியசாலைக்கு முன்பாகவே விபத்துப் பதிவாகியுள்ளது. தோப்பூர் வைத்தியசாலை வீதி, இரவு வேளைகளில் இருளில் மூழ்கிக் காணப்படுவதாகவும், மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை என தெரிவிக்கும் பிரதேச மக்கள், விபத்துச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக, வீதி மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.