அம்பாறை திருக்கோவிலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி நேசநாதன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்
ஸ்ரீ சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி
அஞ்சலிசெலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர் கு.கென்றி மகேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சங்கரி,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணனி சம்மாந்துறை மற்றும் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர்கள், முன்னாள் திரக்கோவில் பிரதேச சபை தவிசாளரும் தமிழீழ விடுதலை
இயத்தின் தலைமைப் பீட உறுப்பினருமான இ.வி.கமலராஜன், கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் போராளிகள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் திருக்கோவிலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல்